600 கோடி கிமீ தொலைவில்இருந்து புவி| Earth at 600 Crores Km away
59 Comments


இந்த தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது பூமி ஒரு பொருட்டாக இல்லைதான். ஆனால்!! நமக்கோ, அவ்வாறு இல்லை அந்தப் புள்ளியை கவனியுங்கள். அதுவே நாம், அதுவே நமது உறைவிடம். அங்குதான், நீங்கள் விரும்பும் ஒவ்வொருவரும், உங்களுக்கு தெரிந்தவர்களும், நீங்கள் கேட்டறிந்தவர்களும், மனித இனத்தை சேர்ந்த அனைவருமே வாழ்கிறார்கள். நமது எல்லா இன்பதுன்பங்களும், உண்மையென்று சொல்லிக்கொள்ளும் ஆயிரக்கணக்கான மதங்களும், சித்தாந்தங்களும், பொருளாதாரக் கோட்பாடுகளும் இங்குதான் இருக்கின்றன. ஒவ்வொரு வேடனும் விவசாயியும், ஒவ்வொரு வீரனும் கோழையும், நாகரீகங்களை செதுக்கியவர்களும் தகர்த்தவர்களும், ஒவ்வொரு அரசனும் உழைப்பாளியும், காதலில்
மூழ்கியிருக்கும் ஒவ்வொரு ஜோடியும், ஒவ்வொரு அம்மாவும் அப்பாவும், ஒவ்வொரு
நம்பிக்கையான குழந்தையும், கண்டுபிடிப்பாளரும் ஆராய்ச்சியாளரும், அறநெறிக் கூறும் ஒவ்வொரு குருவம், ஊழல் செய்யும் ஒவ்வொரு அரசியல்வாதியும், ஒவ்வொரு மாபெரும்நடிகளும் ஒவ்வொரு பெருந்தலைவனும், நமது இன வரலாற்றின் ஒவ்வொரு துறவியும் பாவியும், நமது சூரியக் கதிரில் மிதக்கும் இத்தூசியில் வாழ்ந்தவர்களே. பிரபஞ்சம் என்னும் மாபெரும் அரங்கத்தில் பூமி ஒரு சின்னஞ்சிறு மேடை. இத்தூசியிலுள்ள ஒரு சிறு பகுதியில் வெகு நாள் நிலைத்து நில்லா வெற்றிகாகவும் புகழுக்காகவும் பல மன்னர்களும் தளபதிகளும் சிந்திய இரத்த ஆறுகளை எண்ணி பாருங்கள். இப்புள்ளியின் ஒரு மூலையில் வசிப்பவர்களால், இன வேறுபாடே கண்டறிய முடியாத இன்னொரு மூலையில் வசிப்பவர்கள் சந்திக்கும் கொடுமைகளை எண்ணிப் பாருங்கள். அடிக்கடி எவ்வளவு கருத்து வேறுபாடுகள்? ஒருவரை ஒருவர் வெட்டி சாய்க்க எவ்வளவு உத்வேகம்?? எவ்வளவு உக்கிரமான வெறுப்புணர்ச்சி??? நமது வரட்டு கௌரவம், கர்வம், நாம் இப்பிரபஞ்சத்தின் ஒரு முக்கியமான அங்கம் என்ற அகம்பாவம், போன்ற அனைத்தையும் இம்மங்கிய வெளிச்சத்தில் உள்ள அந்த புள்ளி தகர்த்து தவிடு பொடியாக்குகிறது. இருண்டு கிடக்கும் இம்மாபெரும் பிரபஞ்சத்திற்குள் நமது கிரகம் வெறும் ஒரு அணு. தடந்தெரியாத இவ்விடத்தில், நம்மை நம்மிடமிருந்தே காப்பாற்ற, யாரேனும் வருவார்களா?? என்பதே ஒரு கேள்விக்குறிதான். நாம் அறிந்தவரை, பூமி மட்டுமே உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரே இடம். சமீப எதிர்காலம் வரையிலாவது, நமது இனம் வேறு இடத்திற்கு குடியேற முடியாது. வேறு கிரகித்திற்கு பயணம் செய்யலாம். ஆனால் தங்க முடியுமா? இல்லை. உங்களக்கு பிடிக்கிறதோ இல்லையோ, இப்பூமி ஒன்றில்தான் நமது நிலைப்பாடு இருக்கிறது. வானியல் ஆராய்ச்சி என்பது தன்னடக்கத்தையும் ஒழுக்கத்தையும் வளர்க்கும் அநுபவம், என்று சொல்வார்கள். மனித அகம்பாவங்கள் தவறானவை என்பதை இப்படத்தைப் போல் வேறு எதுவும் தெளிவாக காண்பிக்காது. எனக்கோ,நாம் ஒருவருக்கொருவர்
அன்பு கொண்டு, இந்த வெளிர்நீலப் புள்ளியை பாதுகாத்து போற்ற வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஏனெனில், இந்த வெளிர்நீலப் புள்ளிதான் பிரபஞ்சத்தில் நமக்குத் தெரிந்த ஒரே வீடு. முற்றும்.

59 thoughts on “600 கோடி கிமீ தொலைவில்இருந்து புவி| Earth at 600 Crores Km away

 1. இந்த வீடியோவின் "எதிரொலி அல்லாத" பதிப்பை பார்க்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்க
  சிரமத்திற்கு மன்னிக்கவும் 🙏. http://bit.ly/2IDENXT

  Click the following link to watch “Echo less” version of this video, Sorry for inconvenience. http://bit.ly/2IDENXT.

 2. even though ur video content is good. but your eco voice is very bad please avoid that I can't here it's creates a headache in my head it's very bab.. very very. bad

 3. This is the super information about our univers…. but who create this …..god or other….. plize upload the information about creation….

 4. you don't know to make subscribers , eco voice made me not to share this video. Also I don't like to subscribe. oovac I think your presentation is a shit

 5. அருமையான பதிவு நண்பா வாழ்த்த வார்த்தைகள் இல்லை அதேசமயம் சிந்திக்க வைத்த கருத்துக்கள் சூப்பர் தொடறட்டும் உங்கள் பணி

 6. இதைப் போன்ற சில வீடியோக்களை நான் முயற்சித்து வருகிறேன்.https://youtu.be/qScBiYIICow. இந்த இணைப்பை கிளிக் செய்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும். Thanks

 7. U explained well. I felt in unconscious and hear only your voice nice translation with the good thoughts hand off.

 8. போய் இறைவனின் வசனங்கள் அடங்கியுள்ள புனித குர்ஆனை படியுங்கள்.

 9. அவன் சொல்றானா இல்ல நீயே அடிச்சி வுடுரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *